இயக்குநர் மணிரத்னம்
கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்துக்கு பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடைபெற இருக்கிறது.
லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சுமார் 40 நாட்களுக்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காதல் படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம்டாக்:33 டெம்பிள் ரோடு’ விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சம்யுக்தா, தபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.