சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் சுகாஷ், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார் சூரி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, தனித்துவமான விளையாட்டுப் பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.