தமிழ் சினிமா

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ முதல் சிங்கிள் எப்படி? - வேகமும் இதமும்

ப்ரியா

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 

‘இக்னோர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் பாடலை நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை பிரபல தமிழ் ராப் இசைப் பாடகர் யோகி பி உடன் இணைந்து நடிகை நடிகை அதிதி சங்கர்  பாடியுள்ளார். இவர்களுடன் நிவாஸ் கே பிரசன்னாவும் பாடியிருக்கிறார். பாடலை எம்கே பாலாஜி எழுதி இருக்கிறார்.

யோகி பி-யின் ராப் பாணி வேகமான உச்சரிப்பில் மனம் பாடலைத் தொடரும் போது, இரண்டாவது நிமிடம் நெருங்குகையில் வேகமான இசையை இடை மறித்து இதம் தருகிறது அதிதி குரலில் ஒலிக்கும் கிராமிய தாலாட்டு. ஆனாலும், அது ரசனையை சிதைக்காமல் பாடலுக்கு இதம் சேர்த்திருக்கிறது.

நடிகை அதிதி சங்கர், இதற்கு முன்பு நிவாஸ் கே பிரசன்னாவின் தனி இசை பாடலான ‘இருவரில்’ பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்​தோஷ் குமார் எழு​தி, இயக்​கி​ இருக்கும் இந்தப் படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்​திரசேகர், ஏ.வெங்​கடேஷ், ஆர்.கே.விஜய் முரு​கன், சண்​முகம் முத்​து​சாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபா​தா, ஜென்​சன் திவாகர், லல்​லு, ஜெமினி மணி, ரகு உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். இப்படத்துக்கு பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்​பதிவு செய்​துள்ளார்.

பிர்லா ஸ்டூடியோஸ் - நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்​படம் டிசம்பர் 4 அன்று திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT