இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் காதல் ஜோடியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சாய் ஜோதி நாயகியாக நடிக்கிறார். ஆர்.வெங்கடேஷ், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, தணிகை உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.
ஃபயர் பாக்ஸ் பிலிம் ஹவுஸ் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது.