கபில் | சங்கீதா
காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோவாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும் படத்தில் பணியாற்றியவர்.
சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கபில் கூறும்போது, “இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. காதலை புதிய பார்வையில் வழங்குவதே எங்கள் நோக்கம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.