இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் நடித்துள்ள படம், ’லவ் 3.0’. மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவக்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தை ராஜேஷ் விகே.எழுதி இயக்கியுள்ளார். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார். இதில், இன்ஸ்டாவில் மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட அரனிகா, கோயமுத்தூர் மாப்ள, கார்த்திகேயன் கே.என்.ஸ்மைலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் தோற்றம், தலைப்பு ஆகியவை சென்னையில் உள்ள மால் ஒன்றில் வெளியிடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் கதாநாயகி அரனிகா பேசும்போது, ”இன்றைய தலைமுறையின் காதல் பற்றிப் பேசுகிற படம் இது. அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். எனக்குக் கொடுத்த சவாலான பாத்திரத்தை இதில் சரியாகச் செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
கார்த்திகேயன் கே.என்.ஸ்மைலி பேசும்போது, “இன்ஸ்டாகிராமில் சின்ன சின்ன விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன். இப்போது இந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது” என்றார்.