இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்த மிரட்டலான ஆக்ஷன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.
இதில் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார். வாமிகா கபி சந்திராவாகவும், சஞ்சனா, பார்வதியாகவும் நடிக்கின்றனர். காதலர் தினத்தையொட்டி இப்படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. கோடைக்காலத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.