தமிழ் சினிமா

ஜாலி​யான கதை​யில் ‘சிறை’ அக்‌ஷய் குமார்

செய்திப்பிரிவு

‘சிறை' படத்​தின் மூலம் அறி​முக​மான நடிகர் எல்​.கே. அக் ஷய் குமார், அடுத்து நடிக்​கும் படத்தை அறி​முக இயக்குநர் விக்​னேஷ் வடிவேல் இயக்​கு​கிறார். இதை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்​பில் எஸ்​.எஸ்​.லலித்​குமார் தயாரிக்​கிறார்.

இதில் ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்​ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாஸன், ஐஸ்​வர்யா சர்மா உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள். லியோன் பிரிட்டோ ஒளிப்ப​திவு செய்​யும் இந்​தப்​படத்​துக்கு ஜென் மார்ட்​டின் இசையமைக்​கிறார். ‘ஃபன் என்​டர்​டெய்​ன​ராக’ தயா​ராகும் இந்​தப்​படத்​தின் இறு​திக்​கட்​டப் படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது. தமிழ், மலை​யாள மொழிகளில் உரு​வாகும் இந்தப் படத்​தைக் கோடை விடுமுறை​யில் வெளி​யிடப் படக்​குழு திட்டமிட்டுள்​ளது.

          
SCROLL FOR NEXT