தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஜய். அவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரெய்லரில் வரும் சில காட்சிகள், பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதையம்சத்தை தழுவி உள்ளது. இந்நிலையில், இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ரீமேக் படங்கள் குறித்து பார்ப்போம். அந்த படங்களின் மூலம் தனக்கென தனித்த ரசிகர் படையை அவர் கட்டமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் ரீமேக் பட பட்டியல்: கடந்த 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக விஜய் அறிமுகமானார். கடந்த 1997-ல் மலையாள மொழியில் வெளியான ‘அனியத்திப்ராவு’ படத்தின் ரீமேக்தான் ‘காதலுக்கு மரியாதை’.
1996-ல் தெலுங்கில் வெளியான ‘பெல்லி சந்ததி’ படம்தான் தமிழில் விஜய் நடிப்பில் ‘நினைத்தேன் வந்தாய்’ (1998) என ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு படமான ‘பவித்ர பந்தம்’, தமிழில் ‘பிரியமானவளே’ படமாக ரீமேக் செய்யப்பட்டது. இதோடு பிரெண்ட்ஸ் (மலையாளம்), பத்ரி (தம்முடு - தெலுங்கு), யூத் (சிரு நவ்வுதோ - தெலுங்கு), வசீகரா (நுவு நாக் நச்சாவ் - தெலுங்கு), கில்லி (ஒக்கடு - தெலுங்கு), ஆதி (தெலுங்கு), போக்கிரி (தெலுங்கு), வில்லு (Soldier - இந்தி), காவலன் (பாடிகார்ட் - மலையாளம்), நண்பன் (3 இடியட்ஸ் - இந்தி). இதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் அனைத்தும் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது.