தமிழ் சினிமா

சிறுத்தைப் பல் விவகாரம்: பாடகர் வேடனுக்கு சிக்கல்

செய்திப்பிரிவு

பிரபல ராப் பாடக​ரான வேடன், தமிழ், மலை​யாளத்​தில் பல பாடல்​களைப் பாடி​யிருக்​கிறார். இவர் தனது நண்​பர்கள் 8 பேருடன் போதைப் பொருள் விவ​காரத்​தில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அப்​போது அவர் கழுத்​தில் சிறுத்​தைப் பல்​லுடன் கூடிய செயினை அணிந்​திருந்​த​தாகக் கேரள வனத்​துறை​யினர் வனவிலங்கு பாது​காப்​புச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​தனர்​. அந்த செயினை ரசிகர் ஒரு​வர் அன்​பளிப்​பாக வழங்​கிய​தாக​வும், அது உண்​மை​யான சிறுத்​தைப்​பல்​தானா என்பது குறித்து தெரி​யாது என்​றும் அவர் விளக்​கம் அளித்​திருந்​தார்.

அந்த சிறுத்​தைப்​பல் கொல்​கத்​தா​வில் உள்ள மத்​திய தடய​வியல் ஆய்​வகத்​துக்கு பரிசோதனைக்​காக அனுப்​பப்​பட்​டது. ஆய்​வில் அது உண்​மை​யான சிறுத்​தைப்​பல் என்​பது இப்​போது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் வேடன் மீது குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய கேரள வனத்​துறை​யினர் நடவடிக்கை மேற்​கொண்டு வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT