தமிழ் சினிமா

லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ ஏப்ரல் 9-ல் ரிலீஸ்!

ஸ்டார்க்கர்

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிகட்டப் பணிகள் முடிவடைந்து, படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9-ம் தேதி ‘லீடர்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

          

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லீடர்’. லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘லீடர்’ படத்தினைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தினையும் துரை.செந்தில்குமாரே இயக்கவுள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு, அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT