தமிழ் சினிமா

உணர்​வு​ப்​பூர்வ சம்பவத்தை மையமாகக் கொண்ட ‘கூடு’

நிலா

அறி​முக இயக்​குநர் ஜோயல் விஜய் இயக்​கி​யுள்ள திரைப்​படம் ‘கூடு’. இதில் விஜே கதிரவன், ஜெயப்​பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரக் ஷிதா மகாலட்​சுமி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்​ளார். ஸ்கைமூன் என்​டர்​டெயின்​மென்ட் மற்​றும் கல்ட் டிஜிட்​டல் நிறு​வனங்​களு​டன் இணைந்து பனோரமா ஸ்டூடியோஸ் இப்​படத்​தைத் தயாரித்​துள்​ளது.

“தமிழ்​நாட்​டின் ஒரு கிராமத்​தில் நிகழ்ந்த உணர்​வு​ப்​பூர்​வ​மான சம்பவத்தை மைய​மாகக் கொண்​டது இப்​படம். அரிய வகைப் பறவை ஒன்று மின்​மாற்​றிக்​குள் தனது முட்​டைகளை இட்​டுக் கூடுகட்​டு​கிறது. அந்​தக் கூட்​டையும் அதிலுள்ள உயிர்​களை​யும் பாது​காக்க வேண்​டிய சூழலில், கிராம மக்​கள் தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்​சா​ரத்​தைப் பயன்​படுத்​தாமல் இருக்க முன்​ வருகின்​றனர். ஒற்​றுமையின் மகத்​து​வத்​தையும் கூட்​டாக வெளிப்படும் மனிதநேயத்​தின் வலிமையையும் எடுத்​துரைக்​கும் படம் இது. விரைவில் வெளிவர இருக்​கிறது” என்று படக்​குழு தெரிவித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT