கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்கியுள்ள இதில் ஒய்.ஜி. மகேந்திரா, பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படம் வெளிவருவதற்கு முன்பே தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளது. இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது, “ஆழமான யதார்த்தமான களத்தில் இருந்து உருவான கதை இது. இந்தப் படம் தீவிரமான, ஆழமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தரும்” என்றார்.