தமிழ் சினிமா

​திருநங்கை சமூகத்துக்காகப் பிரத்யேக ‘ஹெல்ப்லைன்’ - கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

நிலா

கார்த்திக் சுப்புராஜ் இயக்​கத்​தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்​பில் செப். 25-ம் தேதி வெளி​யான படம் ‘டோரதி’. இளை​ய​ராஜா இசையமைத்​திருந்​தார். இப்​படம் வரவேற்பைப் பெற்​றது.

சமீபத்​தில் படக்​குழுவை நேரில் அழைத்து ரஜினி​காந்த் பாராட்டினார். இந்​நிலை​யில் சமூக நீதித்​துறை அமைச்சர் வன்னி அரசு, இப்​படக் குழு​வினரை நேரில் அழைத்​துப் பாராட்​டுத் தெரிவித்​துள்​ளார்.

கார்த்​திக் சுப்​பு​ராஜ் அமைச்​சருட​னான சந்​திப்பு குறித்து தனது எக்ஸ் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ளார்.

அதில், “சமூகத்​தில் ஆரோக்கிய​மான உரை​யாடலை​யும் மாற்​றத்​தை​யும் உருவாக்கிய எங்​களது படத்தை அமைச்​சர் வன்னி அரசு பாராட்டினார்.

திருநங்​கைகளுக்கு எதி​ரான வெறுப்​புணர்வை ஒழிப்​ப​தற்​குக் கடுமை​யான விதி​களை அமல்படுத்​த​வும் திருநங்கை சமூகத்துக்காகப் பிரத்​யேக ஹெல்ப் லைன் எண் உரு​வாக்​க​வும் நான் விடுத்த கோரிக்​கையை ஏற்​றுக்​கொண்​டார். எங்​கள் திரைப்படத்​தைப் பற்​றிய பாராட்​டு​களும் ஆதர​வும் எங்​களுக்கு மிகுந்த ஊக்​கமளிக்​கின்​றன” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT