சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு புதிய பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7 அன்று வெளியான 'டிசி' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சன் குழுமத் தலைவரும் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஹீரோவாக நடித்த லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ரக சொகுசு கார்களின் சாவிகளை வழங்கி கவுரவித்தார்.
இதற்கு முன்பு கடந்த 2023-ல் வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோருக்கு கார்கள் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.