‘கைதி 2’ படத்தின் நிலை என்ன என்பது குறித்த கேள்விக்கு கார்த்தி பதிலளித்துள்ளார்.
கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார் கார்த்தி. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, கார்த்தியிடம் அல்லு அர்ஜுன் படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு கார்த்தி, “லோகேஷ் கனகராஜ் தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் மீது கார்த்தி சற்று அதிருப்தியில் இருப்பது தெளிவாகிறது. ஏனென்றால் ‘கைதி 2’ குறித்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தாலும், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக வேறு படத்தினை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கைதி 2’ உருவாகவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், எப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது தான் கேள்வியாக சுற்றி வருகிறது. அல்லு அர்ஜுன் படத்தினை முடிக்க எப்படியும் இரண்டு ஆண்டுகளாகும். அதுவரை ‘கைதி 2’ எப்போது என்ற கேள்வி தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்.