தமிழ் சினிமா

பழமை​யான கேம​ராவை மையப்படுத்தும் ‘ஜுமாக்கா’

நிலா

அறி​முக இயக்​குநர் அசோக் ராம் இயக்​கத்​தில் முனீஷ்​காந்த் நடிக்கும் படத்​துக்கு ‘ஜுமாக்கா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்​னா, கல்​கி, ஜென்​சன் திவாகர், வினோத் முன்​னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்​. இதை ஜே.பி.சினி​மாஸ் சார்​பில் ஜெயக்​கு​மார், ப்ரீத்தி தயாரிக்​கின்​றனர்.

ஃபேன்​டஸி காமெடி படமான இதன் கதை, பழமை​யான கேமரா ஒன்றை மையப்​படுத்​தி​யது. ஸ்ரீதர் சுப்​பிரமணி ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப்​படத்​துக்கு ஆனந்த் காசி​நாத் இசையமைத்​துள்​ளார். இதன் படப்​பிடிப்பு சென்​னை​யில் நிறைவு பெற்​றது. இப்​படத்​தின் தலைப்பு மற்​றும் முதல் தோற்ற போஸ்​டரை விஜய் ஆண்​டனி தனது சமுக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT