ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ஃபேமிலி ரொமான்டிக் காமெடி படமான இதில் பொன்வேல், தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கின்றனர். தீபக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். கவுதம் ராஜ் இயக்குகிறார்.
ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜயபாண்டி மற்றும் ஷாஜகான் ஜி இணைந்து தயாரிக்கின்றனர். த ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். “ஜென் ஸீ தலைமுறை, 2கே தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது” என்றது படக்குழு.