தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ லீக் துரதிஷ்டவசமானது: மமிதா பைஜு வேதனை

ஸ்டார்க்கர்

‘ஜனநாயகன்’ இணையத்தில் லீக்கானது மிகவும் துரதிஷ்டவசமானது என்று மமிதா பைஜு வேதனை தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், தணிக்கைப் பிரச்சினையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு முழுப்படமும் இணையத்தில் லீக்கானாது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. இந்த வெளியீட்டால் படக்குழுவினருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

’ஜனநாயகன்’ வெளியீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. இந்த வெளியீடு தொடர்பாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, “இது மிகவும் ஏமாற்றமும், வேதனையும் தருகிறது. எத்தனையோ பெரும் கனவுகளும், கடின உழைப்பும் இந்த வெளியீட்டினால் வீணாகப் போயுள்ளது. ஆனால், அவை இதற்கு தகுதியானது அல்ல.

ஆரம்பத்தில், இந்த வெளியீடு குறித்து சமூக வலைதளத்தில் வந்த தகவல்களை நம்பவில்லை. ஏனென்றால் அவற்றில் வரும் அனைத்தையும் நம்பிவிட முடியாது. என் சகோதரர் தான் முதன்முதலில் இந்த வெளியீடு குறித்து தெரிவித்தார். ஏன் இப்படி என நினைத்தேன். இந்த லீக் என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.

SCROLL FOR NEXT