தமிழ் சினிமா

’ஜெயிலர் 2’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி

ஸ்டார்க்கர்

’ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது.

‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய காட்சிகளை கோவாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இதில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பதினை தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. அதன் மூலம் இப்படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

ரஜினி – விஜய் சேதுபதி இருவருமே ‘பேட்ட’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதற்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று ‘ஜெயிலர் 2’ படத்தின் டீஸர் வெளியாகும் என தெரிகிறது. இதில் ரம்யாகிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ’ஜெயிலர்’ படத்தின் 2ம் பாகம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

SCROLL FOR NEXT