தமிழ் சினிமா

ரூ.30 கோடியை நெருங்கிய ‘ஜெயிலர் 2’ டிக்கெட் முன்பதிவு விற்பனை!

ப்ரியா

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு விற்பனை உலக அளவில் ரூ.30 கோடியை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. கடந்த 2023-ல் வெளியான ‘ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாக இருக்கிறது. படத்துக்கான முன்பதிவு சனிக்கிழமை (அக்.10) மாலை தொடங்கியது.

இந்தியாவில் படம் அதன் முதல்நாள் காட்சிகளுக்காக மொத்தம் ரூ.10.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 242 நகரங்களில், 771 திரையரங்குகளில் 4,843 காட்சிகளுக்காக சுமார் 5.69 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

இப்படம் மூன்று நாளில் இந்தியாவில் முன்பதிவு டிக்கெட் விற்பனை மூலம் ரூ.16.56 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் ‘ஜெயிலர் 2’ படம் முதல் நாளுக்கான முன்பதிவின் மூலம் ரூ.6.34 கோடி வசூலித்துள்ளது. அடுத்தபடியாக கேரளாவில் ரூ.2.3 கோடியும், கார்நாடகாவில் ரூ.1.22 கோடியும், தெலங்கானாவில் ரூ.47.35 லட்சமும் வசூல் செய்துள்ளது.

சென்னையில் ‘ஜெயிலர் 2’ முதல்நாள் காட்சிகளுக்கான முன்பதிவின் மூலம் ரூ 3.15 கோடி வசூலாகி உள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ், வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

அனிருத் இசையமைத்து இருக்கும் படத்துக்கு, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மல் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 15 அன்று திரையரங்கில் வெளியாகிறது.

SCROLL FOR NEXT