தமிழ் சினிமா

‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தந்தையாக சீமான்?

நிலா

சிவகார்த்திகேயன் கதா​நாயக​னாக நடித்​து​வரும் ‘சேயோன்’ படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்​கு​கிறார். சந்​தோஷ் நாராயணன் இசை அமைக்​கும் இப்​படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் மற்​றும் டர்​மெரிக் மீடியா இணைந்து உரு​வாக்கி வரு​கிறது.

மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இந்​தப் படத்​தில், நாம் தமிழர் கட்​சித் தலைமை ஒருங்​கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக ஏற்​கெனவே செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. இந்​நிலை​யில் அதைப் படக்​குழு அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது. படப்​பிடிப்பில் சீமான் கலந்து கொண்ட புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வேக​மாகப் பரவி வரு​கின்​றன. சிவகார்த்திகேயனுக்கு தந்​தை​யாக சீமான் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT