நடிகை ரெஜினா கஸண்ட்ரா

 
தமிழ் சினிமா

‘மூக்குத்தி அம்மன் 2’-ல் நயன்தாராவுக்கு வில்லி ஆகிறாரா ரெஜினா?

நிலா

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி இருந்தார். அவர் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகம் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதை சுந்தர்.சி இயக்குகிறார்.

நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். கன்னட நடிகர் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கும் மேல் என்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவுக்கு வில்லியாக ரெஜினா நடிப்பதாகவும் இந்தக் கதாபாத்திரத்துக்காக அவருக்கு வித்தியாசமான தோற்றம் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT