தமிழ் சினிமா

‘ராஜா, நீயுமா லேட்டு?’ - சிவாஜி உடனான நினைவைப் பகிர்ந்த இளையராஜா

நிலா

அறி​முக இயக்​குநர் டி.டி.​பாலச்​சந்​திரன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘லெனின் பாண்​டியன்’. தர்​ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள இப்​படம், செப். 25-ல் வெளி​யாகிறது. இளை​ய​ராஜா இசை அமைத்​துள்​ளார்.

சத்​யஜோதி பிலிம்ஸ் சார்​பில் செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரித்​துள்ள இப்​படத்தை டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்​கு​கிறார். மணல் கொள்​ளையை மைய​மாக வைத்து நம் மண்​ணின் வாழ்​வியலை​யும் எளிய மக்​களின் உரிமை​களை​யும் பேசும் அழுத்​த​மான படைப்​பாக இது உரு​வாகி​யுள்​ளது. இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

தயாரிப்​பாளர்​கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சி​வா, தனஞ்​செயன், சுஜாதா விஜயகு​மார், அருள்​ப​தி, இயக்​குநர்​கள் பி.​வாசு, கண்​ணன், பத்​ரி, நடிகர் இளவரசு, நடிகை அர்ச்​சனா உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

விழா​வில் இளை​ய​ராஜா பேசும்​போது, “நடிகர் தில​கம் சிவாஜி கணேசன் எப்​போதும் நேரத்​தைச் சரி​யாகக் கடைப்​பிடிப்​பவர். நான் தின​மும் சரி​யாக 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு செல்​வேன். ஒரு​நாள், 5 நிமிடங்​கள் தாமத​மாகி​விட்​டது. காரில் இருந்து இறங்​கும்​போது சிவாஜி அண்ணா நின்​று​கொண்​டிருந்​தார்.

என்​னைப் பார்த்​ததும், ‘ராஜா, நீயுமா லேட்​டு?’ என்று கேட்​டார். இத்​தனை ஆண்​டு​களாக நேரத்​துக்கு வந்து கொண்​டிருக்​கும் என்னை விடச் சீக்​கிரம் வந்​து, என்​னிடமே இப்​படிக் கேட்​கிறாரே என்று அந்த நிகழ்வை இன்​றும் நினைத்​துப் பார்க்​கிறேன்.

நடிப்​பைப் பற்றி அவர் நிறைய கதைகள் சொல்​லி​யிருக்​கிறார். ஒரு நடிகர் புதி​தாக அறி​முக​மாகும்​போது, ‘யாருப்பா இது?’ என்று ரசிகர்​கள் கேட்​கும் அளவுக்கு இருக்க வேண்​டும். அதன்​பிறகு அந்த நடிகரைப் பார்த்​து, ‘யாரு இந்த ஆள்​?’என்று வியக்​கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்​டும். அப்​படிப்​பட்ட மிகப்​பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.

அவருடைய குடும்​பத்​திலிருந்து வந்​திருக்​கும் தர்​ஷனின் நடிப்பை இந்​தப் படத்​தில் பார்த்​தேன். சிவாஜி அண்​ணா​வின் பெயரை​யும், அந்த நடிப்பு வம்​சாவளியை​யும் காப்​பாற்​றும் வகை​யில் சிறப்​பாக நடித்​திருக்​கிறார். என் தம்பி கங்கை அமரனைப் பற்​றிச் சொல்ல வேண்​டிய​தில்​லை. இவன் என்​கிட்​டயே நடிப்​பான். நிஜ​மாகவே தம்​பி​யும் நன்​றாக நடித்​திருக்​கிறான்​”என்​றார்.

SCROLL FOR NEXT