தமிழ் சினிமா

‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாறுகிறதா?

செய்திப்பிரிவு

சுதா கொங்​கரா இயக்​கத்​தில், சிவ​கார்த்​தி​கேயன், ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘பராசக்​தி’. 1960-ம் கால​கட்​டத்​தில் நடக்​கும் கதையை கொண்ட இப்​படத்​துக்கு ஜி.​வி.பிரகாஷ்கு​மார் இசை அமைத்​துள்​ளார்.

இப்​படம், பொங்​கலை முன்​னிட்டு ஜன.14-ம் தேதி வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளி​யிடும் இப்​படத்​தின் ரிலீஸ் தேதி இப்​போது மாற்றப்பட்டுள்ளதாகவும் அதாவது ஜன.10-ம் தேதியே வெளி​யாக இருப்​ப​தாக​வும் செய்திகள் வெளி​யாகி​யுள்​ளன. இது குறித்த அதிகாரப்​பூர்வ அறி​விப்பு ஏதும் வரவில்​லை.

பொங்​கலை முன்​னிட்டு ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் படம், ஜன.9ம் தேதி வெளி​யாக உள்​ளது. இதனால் இரண்டு படத்​துக்​கும் சரி​யான போட்​டி​யாக இருக்​கும் என்று ரசிகர்​கள் கூறி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT