தமிழ் சினிமா

‘த குட் டாக்​டர்’ ரீமேக்​கா ரஜினியின் ‘தர்​மன்’?

நிலா

நடிகர் ரஜினி​காந்​தின் 173-வது படம் ‘தர்​மன்’. கமல்​ ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர் நேஷனல் தயாரிக்​கும் இப்​ படத்தை ஆர்​.மகேந்​திரன் இணை தயாரிப்பு செய்​கிறார்.

‘ஓ மை கடவுளே’, ‘டி​ராகன்’ படங்​களை இயக்​கிய அஸ்​வத் மாரி​முத்து இயக்​கு​கிறார். நிகேஷ் பொம்மி ஒளிப்​ப​திவு செய்​கிறார். சிம்​ரன், ராசி கன்​னா, யோகி பாபு உள்பட பலர் நடிக்​கின்​றனர். இப்​படத்​தின் தொடக்​க​ விழா ஜூன் 24ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் இதன் படப்​பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்​கி​யுள்​ளது.

இப்​படத்​தின் புதிய போஸ்​டரை சமூக வலை​தளங்​களில் வெளியிட்​டுள்ள படக்​குழு, படப் பிடிப்பு தொடங்கி இருப்​பதை அறிவித்துள்​ளது. “தனித்​து​வமே அவரது அடை​யாளம், கெட்​டப் பையன் சார். தர்​மன் படப்​பிடிப்பு தொடங்கி விட்​டது” என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய போஸ்​டர் வேக​மாகப் பரவி வரு​கிறது. இதற்​கிடையே ‘குட் டாக்​டர்’ என்ற அமெரிக்க டிவி சீரியல் தொடரின் உரிமையை வாங்கி இப்​படத்தை உரு​வாக்​கு​வ​தாக சமூக வலை​ தளங்​களில் வெளி​யான தகவலை இயக்​குநர் அஸ்​வத் மாரி​முத்து மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT