தமிழ் சினிமா

திரைத்​ துறை​யில் 49 ஆண்டுகள்: ராதி​கா​ சரத்குமாருக்கு ‘ஹாய்’ குழு வாழ்த்து

ப்ரியா

நடிகை ராதிகா சரத்​கு​மார் திரைத்​துறை​யில் 49-வது ஆண்​டுக்​குள் அடி​யெடுத்து வைத்​துள்​ளதை அடுத்து அவருக்கு ‘ஹாய்’ படக்​குழு​வினர் கேக் வெட்டி வாழ்த்​துத் தெரி​வித்​தனர்.

நடிகை ராதி​கா, பார​தி​ ராஜா இயக்​கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்​தின் மூலம் சினி​மா​வில் அறி​முக​மா​னார். தொடர்ந்து ‘நிறம் மாறாத பூக்​கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்​ல​வன்’, `சிப்​பிக்​குள் முத்து' என ஏராள​மான படங்​களில் நடித்து ரசிகர்​களிடம் தனக்​கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

          

இந்​தி, தெலுங்​கு, மலை​யாளப் படங்​களி​லும் நடித்​துள்ள அவர், சின்​னத்​திரை​யிலும் முத்​திரைப் பதித்​தார். அவர் பவுனுத்​தாயி என்ற 70 வயது மூதாட்டி தோற்​றத்​தில் நடித்து சமீபத்​தில் வெளியான ‘தாய் கிழ​வி’ படம் சூப்​பர் ஹிட் வெற்​றியை பெற்றுள்ளது.

இந்​நிலை​யில் ராதி​கா, சினி​மா​வில் 49 ஆண்​டுக்​குள் நுழைவதை அடுத்​து, அவருக்கு ‘ஹாய்’ படக்​குழு​வினர் கேக் வெட்டி ஆளுயர மாலை அணி​வித்து கவுர​வித்​தனர். இது தொடர்​பான புகைப்படங்கள் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கின்​றன. கவின், நயன்​தாரா நடிக்​கும் ‘ஹாய்’ படத்தை விஷ்ணு எடவன்​ இயக்​கி வரு​கிறார்​.

SCROLL FOR NEXT