தமிழ் சினிமா

‘ஹபீபி’ தமிழ் சமூகத்துக்கான படம்: மகிழ் திருமேனி

செய்திப்பிரிவு

‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்​திரு’ படங்​களை இயக்​கிய மீரா கதிர​வன், இப்​போது புது​முகங்​கள் நடித்​துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்​கி​யுள்​ளார்.

இயக்​குநர் கஸ்​தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்​கிய வேடங்களில் நடித்​துள்​ளனர். நேசம் என்​டர்​ டெ​யின்​மென்ட் தயாரித்துள்ள இந்​தப் படத்​துக்கு மகேஷ் முத்​து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்​ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்​ளார்.

இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடைபெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சேரன், பார்த்திபன், அமீர், சமுத்​திரக்​க​னி, வெற்​றி​மாறன், மகிழ் திருமேனி, பாண்​டி​ராஜ், மிஷ்கின், சுசீந்​திரன், தயாரிப்​பாளர் பி.தேனப்​பன், நடிகர் நாசர், தவெக எம்​எல்ஏ முஸ்​தபா உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் மகிழ் திரு​மேனி பேசும்​போது, “ஹபீபி படத்​தைப் பார்த்து விட்​டேன். இன்​றைய ட்ரெண்ட், சமூக சூழ்​நிலைக்கு ஏற்ப என திரைத்​துறை​யில் காலத்​துக்கு ஏற்​ற​வாறு ஓட வேண்​டிய கட்டாய​மும் நெருக்​கடி​யும் உள்​ளது. ஆனால், வேறு சில படங்​கள் உள்​ளன. அவை நம் வாழ்க்​கைக்கு மிக நெருக்​க​மானவை. அப்படியான படம்​தான் ‘ஹபீபி’.

இதை நண்​பர் மீரா கதிர​வன் இயக்கி இருக்​கிறார் என்​பது பெருமை. வாழ்​வா​தா​ரத்​துக்​காக நாடு விட்டு நாடு செல்​லும் ஆண்கள், அவர்​களைப் பிரிந்து தவிக்​கும் குடும்​பத்​தினர், இயந்திரமய​மாக்​கல் காரண​மாகத் தொழில் பாதிக்​கும் கைத்​தறி நெச​வாளர்​கள், கூட்​டுக் குடும்​பச் சிதைவு என பல விஷ​யங்​கள் இதில் பேசப்​பட்டு இருக்​கின்​றன.

தமிழ் சமூகத்​துக்​கான படம் இது. ஒரு கால​கட்​ட வாழ்​வியலை, பண்​பாட்டை இந்​தப் படம் ஆவணப்​படுத்தி இருக்​கிறது. தான் சார்ந்த முடிவு​களைத் தானே எடுக்​கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்​ணின் கதா​பாத்​திரம்​ இந்​தப்​ படத்​தில்​ உண்​டு” என்​றார்​.

SCROLL FOR NEXT