தமிழ் சினிமா

‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? - இசை வெளியீட்டு விழாவில் ஹெச்.வினோத் விளக்கம்

ப்ரியா

‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? என்பது குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் விளக்கம் அளித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், தமிழகம் மற்றும் மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ, நடிகை பூஜா ஹெக்டே, பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள் என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது.

இதில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது: “இந்த படம் எப்படி இருக்கும் என்று சில பேருக்கு சந்தேகங்கள் இருக்கிறது. இந்த படம் ஒரு ரீமேக், இது எப்படி ஒர்க் ஆகும் என்று நினைப்பவர்களுக்கும், இல்லை இது பாதி ரீமேக் மீதி புதியது என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், ‘ஜனநாயகன்’ முன்னபின்ன இருப்பது போல இருக்கே, உள்ளே புகுந்து அடித்து விடலாமா என்று நினைப்பவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ‘ஐயா, இது தளபதி படம்’. 

இது 100 சதவீதம் விறுவிறுப்பான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இதில் நீங்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதற்கான தருணங்களும், அமைதியாக யோசிப்பதற்காக தருணங்களும் உண்டு. படத்தின் இறுதியில் 20 நிமிடம் விஜய்க்கு பிரியாவிடை இருக்கிறது, எமோஷனல் ஆன தருணங்கள் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டுமே உள்ளது. ஏனென்றால் தளபதிக்கு முடிவே கிடையாது. தொடக்கம் மட்டும்தான்” இவ்வாறு ஹெச்.வினோத் பேசினார். 

SCROLL FOR NEXT