தமிழ் சினிமா

ஹாரர் த்​ரில்​லர் கதையில் ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன்

நிலா

இயக்​குநர் கவுதம் வாசுதேவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்​கும் ஹாரர் த்​ரில்​லர் படத்​துக்கு ‘13’ என்று தலைப்பு வைத்துள்​ளனர்.

இதில் பவ்யா திரிகா, ஆதித்யா கதிர், ஐஸ்​வர்யா, ஆதியா பிரசாத் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். மெட்​ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இப்​படத்தை விவேக் கே இயக்​கு​கிறார். சித்​துக்​குமார் இசை அமைக்​கிறார். சி.எம். மூவேந்​தர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இப்படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக் வெளியாகி இருக்​கிறது.

படம் பற்றி இயக்​குநர் விவேக் கே கூறும்​போது, “உண்​மைச் சம்​பவங்​களின் சாயலில், அடர்ந்த காட்​டின் பின்​னணி​யில் உருவாக்கப்​பட்​டுள்ள படம் இது. இருளுக்​குள் மறைந்​திருக்​கும் ‘13’ என்ற எண்​ணின் மர்​மமும், சாத்​தானின் பிடி​யில் சிக்கிக்கொள்ளும் மனிதர்​களின் போராட்​டமும் ஒவ்​வொரு விநாடியும் பதற்​றத்தை ஏற்​படுத்​தும். டிசம்பரில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT