தமிழ் சினிமா

‘சிட்​டுக்​குறிஞ்சி’ படத்துக்காக பிரம்மாண்ட கிராமம் செட்

நிலா

அறி​முக இயக்​குநர் வி.ஜே. மீனாட்சி சுந்​தரம் கதை, திரைக்​கதை எழுதி இயக்​கி​யுள்ள படம், ‘சிட்​டுக்​குறிஞ்​சி’.

காதல், நகைச்​சுவை, ஃபேன்​டஸி படமான இதில் ரஜித் மேனன் கதா​நாயக​னாக நடித்​துள்​ளார். அவருடன் தீப்​ஷி​கா, நக் ஷா சரண், வி.ஜே.பப்​பு, ஜி.எம்​.கு​மார், எல்​.​வி.ஆதவன், ராம்​ஸ், ஹலோ கந்​த​சாமி, தேனி முரு​கன், சுஜாதா உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்​யூஷன்ஸ் சார்​பில் டி.ஜூட் ஆனந்த் தயாரிக்​கிறார்.

1983-ம் ஆண்​டில் நடப்​பது போன்ற கதையை கொண்ட இதன் படத்​துக்​காக, கொடைக்​கானல் பள்​ளங்கி மலைப்​பகு​தி​யில் பல ஏக்​கர் பரப்​பள​வில் மிகப்​பெரிய கிராமம் செட் அமைத்து படமாக்​கி​யுள்​ளனர். அறி​முக இசையமைப்​பாளர் மாறா இசையமைத்​துள்​ளார். பிரான்​சிஸ் ராஜ்கு​மார் ஏ.ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

“வித்​தி​யாச​மான கதைக்​களம், பிரம்​மாண்​ட​மான காட்​சி​யமைப்பு மற்​றும் காதல், நகைச்​சுவை, ஃபேன்​டஸி கலந்த படமான இது, ரசிகர்​களைக் கவரும். படத்​தின் பின்​னணி இசை ஹங்​கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் சர்​வ​தேச இசைக் கலைஞர்​கள் பங்களிப்புடன் லைவ் ஆர்​கெஸ்ட்ரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்​போது டப்​பிங் பணி​கள் தொடங்​கி​ உள்ளன” என்று படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT