தமிழ் சினிமா

“சொல்​லுங்க ஜி, யார் ஹீரோ?” - ரஜினி - கமல் பட ப்ரோமோ வைரல்!

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினி​காந்த், நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கும் ‘ஜெ​யிலர் 2’ படப்​பிடிப்பை முடித்​துள்​ளார். இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்​கிறார். இதையடுத்து அவர் ‘டான்’ பட இயக்​குநர் சிபி சக்​ர​வர்த்தி இயக்​கும் படத்​தில் நடிக்​கிறார்.

அந்​தப் படத்​தைத் தொடர்ந்து ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கு​கிறார். 47 வருடங்​களுக்​குப் பிறகு இந்​திய சினி​மா​வின் இரண்டு திரை ஜாம்பவான்கள் இணை​யும் இப்​படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்​பில் இன்​பன் உதயநிதி தயாரிக்​கிறார். அனிருத் இசையமைக்​கிறார். இப்​படத்​தின் மீதான எதிர்​பார்ப்பு ரசிகர்​களிடையே அதிகரித்​துள்​ளது.

          

இந்​நிலை​யில் இவர்​கள் இணைந்து நடிக்​கும் படத்​தின் புரமோ வீடியோ வெளி​யாகி இருக்​கிறது. அதில் ரஜினி - கமல் இரு​வரும் மிரட்​டலான ரெட்ரோ தோற்​றத்​தில் வருகின்​றனர். பின்​னணி இசை​யும் பிரம்​மாண்​ட​மான அரங்​க​மும் படத்​தின் மீதான ஆர்​வத்​தைத் தூண்​டு​கின்​றன. யார் ஹீரோ? என்று இருவரும் கேட்கும் இந்த புரமோ வீடியோ இணை​யத்​தில் வைரலாகி வரு​கிறது.

SCROLL FOR NEXT