ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஜி.டி.நாயுடு’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வந்த படம் ‘ஜி.டி.நாயுடு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இதன் தமிழக உரிமையினை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், சத்யராஜ், ஜெயராம், ப்ரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணிபுரிந்துள்ளார். சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படமாக்கியுள்ளது படக்குழு.
இப்படத்துக்காக பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளார் மாதவன். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் மாதவன் இருந்த புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் டீசர், ட்ரெய்லருடன் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.