தமிழ் சினிமா

அரசியல் ஆசை கொண்டவராக நடிக்கிறார் கவுதம் ராம் கார்த்திக்

நிலா

கவுதம் ராம் கார்த்​திக் நடித்து வரும் படம், ‘பிளடி பாலிடிக்​ஸ்’. அரசி​யல் த்ரில்​லர் படமான இதை தினா ராகவன் இயக்​கி​யுள்​ளார். அஞ்​சனா, ரோபி, பி.​வாசு, செல்​வ​ராகவன், வெங்​கடேஷ், இந்​து​ம​தி, ஆதித்யா கதிர், பாக்​கி​யம் சங்​கர் உள்பட பலர் நடிக்​கின்​றனர். சாம் சி.எஸ் இசை அமைத்​துள்​ளார். ராஜு முரு​கன் வசனம் எழு​தி​யுள்ள இப்​படத்​துக்கு பிரதீப் காளி​ராஜா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்​படத்​தில் அரசி​யல்​வா​தி​யாக வேண்​டும் என்ற ஆசை​யில் இருக்​கும் ஆக்​ரோஷ​மான இளைஞ​ராகக் கவுதம் ராம் கார்த்​திக் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் டீஸரை விஜய் சேதுபதி வெளி​யிட்​டுள்​ளார். வெளி​யான சில நிமிடங்​களி​லேயே நல்ல வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. இயக்​குநர் கணேஷ் கே பாபு வழங்​கும் இப்​படத்தை சஞ்​சய் முத்​துக்​கு​மார் இணை தயாரிப்பு செய்​கிறார்.

SCROLL FOR NEXT