சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஎச்கே’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.
இதையடுத்து இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்குகிறார். இதில் ஃபைனலி பரத் நாயகனாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ‘குடும்பஸ்தன்’நாயகிய சான்வி மேக்னா நடிக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் அருண் விஷ்வா, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் ஹரி ஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறோம். இதுவும் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும்” என்றார்.