தமிழ் சினிமா

ஃபைனலி பாரத்தின் புதிய படம் தொடக்கம்

ஸ்டார்க்கர்

ஃபைனலி பாரத் நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’மாவீரன்’, ‘3 பி.ஹெச்.கே’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் புதிய படமொன்றை அறிவித்துள்ளது. இப்படத்தினை அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கவுள்ளார். இதில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்‌ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT