ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப் படத்துக்கு ‘அசரீரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், ஷிவதா, சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 96, மெய்யழகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குகிறார்.
இப்படத்துக்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் இப்படம் ஜன.1-ல் புத்தாண்டு அன்று வெளியாகிறது.