தமிழ் சினிமா

“திரைப்படங்களில் மொழிமாற்ற சவால்கள்” - டப்பிங் இயக்குநர் ஆர்.பி.பாலா நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

​பான்- இந்​தியா படங்​கள் மற்​றும் ஓடிடி-வரு​கைக்​குப் பிறகு திரைப்​படங்​கள் மற்​றும் வெப் தொடர்​களை மொழி​மாற்​று​வது பிசி​யாகி இருக்​கிறது.

மலை​யாளத்​தில் இருந்து வெளி​யாகும் திரைப்​படங்​களை அதி​க​மாக மொழி​மாற்றி வரு​கிறார் இயக்​குநரும் மொழி​மாற்று வடிவ​மைப்​பாள​ரு​மான ஆர்​.பி.​பாலா.

சமீபத்​தில் வெளி​யான ‘லோ​கா- சாப்​டர் 1: சந்​தி​ரா’ படத்​தின் சக்​சஸ் மீட்​டில், அவருடைய டப்​பிங்கை வெளிப்​படை​யாக பாராட்​டி​யிருந்​தார் துல்​கர் சல்​மான்.

பாலா​விடம் கேட்​டால், “அது​தானே சார் என் வேலை” என்​கிறார் அமை​தி​யாக. சென்​னை​யில், நயன்​தா​ரா​வின் ‘டியர் ஸ்டூடன்ட்’ டப்​பிங்​கில் இருந்​தவரிடம் பேசினோம்.

தொடர்ந்து மலை​யாளப் படங்​களுக்கு டப்​பிங் பண்ணிட்டு வர்​றீங்​க...

மலை​யாளம் மட்​டுமல்ல, தெலுங்​குக்​கும் பண்​ணி​யிருக்​கேன். அந்த இரண்டு மொழிகளும் எனக்கு நல்லா தெரி​யும்ங்​கறது எனக்கு பிளஸ். மலை​யாளத்​துல இருந்து நிறைய படங்​கள் டப்​பிங் பண்ணி யிருந்​தா​லும் எனக்​குப் பெரிய அடை​யாளத்​தைக் கொடுத்​தது மோகன்​லால் சாரின் ‘புலி​முரு​கன்’ தான். அதைத் தமிழ்ப் படுத்​தும்​போது மோகன்​லால் சார்​தான் தமிழ்ல பேசி​னார்.

மற்ற நடிகர், நடிகைகளுக்​குச் சரி​யான ஆட்​களைத் தேர்வு செய்து பண்​ணினேன். மலை​யாள வார்த்​தைக்கு தமிழ்ல, நடை​முறை​யில எந்த வார்த்தை பொருத்​தமா இருக்​கும்னு தேடி வசனம் எழுது​வேன். அந்தப் படம் தமிழ்​ல​யும் ஹிட்​டான​தால நான் வெளியே தெரிய ஆரம்​பிச்​சேன்.

மோகன்​லாலின் பெரும்​பாலான படங்​களுக்கு நீங்​க​தான் மொழி​மாற்​றம் பண்​ணியிருக்​கீங்​க...

‘புலி​முரு​கன்​’​தான் காரணம். அதை பார்த்​தீங்​கன்னா டப்​பிங் படம் மாதிரியே தெரி​யாது. நேரடி தமிழ்ப் படம் மாதிரியே இருக்​கும். படம் பார்த்​துட்டு மோகன்​லால் சார் ரொம்ப பாராட்​டி​னார். அதுக்​குப் பிறகு அவர் நடிச்ச எல்லா படங்​களுக்​கும் நான்​தான் டப்​பிங் பண்​ணி​யிருக்​கேன்.

‘லூசிஃபர்’ படத்தை பார்த்​துட்டு நேரடி தமிழ்ப் படம் மாதிரியே இருக்​குன்னு நிறைய பேர் பாராட்​டி​னாங்க. ‘ஒப்​பம்’, ‘மரைக்​காயர்’, அவர் இயக்கி நடிச்ச ‘பரோஸ்’, ‘எம்​பு​ரான்’, ‘ஹிருதயபூர்​வம்​’னு மோகன்​லால் சாரோட நிறைய படங்​கள் பண்​ணி​யிருக்​கேன்.

பொருத்​த​மான குரல்​களை எப்​படி தேர்வு பண்​றீங்க?

நான் டப்​பிங் ஸ்டூடியோ வச்​சிருக்​கேன். யார், யாரோட வாய்​ஸ், எந்த கதா​பாத்​திரத்​துக்கு பொருத்​தமா இருக்​கும்னு தெரி​யும். “லோ​கா- சாப்​டர் 1: சந்​திரா’ படத்​துக்கு கூட அதோட இயக்​குநர் டொமினிக் அருண், ரொம்ப ஸ்டைலிஷா பண்​ணலாம்னு சொன்​னார்.

ஒரு கதா​பாத்​திரத்​துக்கு முதல்ல ஒரு வாய்ஸ் டிசைன் பண்​ணி​யிருந்​தேன். அது இயக்​குநருக்கு திருப்​தியா இல்​லை. பிறகு அவர் எதிர்​பார்க்​கிறதைப் புரிஞ்​சுகிட்டு வாய்ஸ் தேர்வு பண்​ணினேன். வசனங்​களை கூட மணிரத்னம் சார் படம் மாதிரி எழுத வச்​சார். டப்​பிங் பேசறவங்ககிட்ட குறைஞ்​சது பத்து டேக் வரை​யா​வது எடுத்து வைப்​பேன்.

‘ஆடுஜீ​விதம்’ படத்​துல ஒரு பையன் கேரக்​டருக்கு 50 டேக் வரை போயிருக்​கேன். படத்​துல வர்ற அந்த ‘ஃபீலை’ குரல்​ல​யும் கொண்டு வரணும். ஒரிஜி​னாலிட்டி வேணுங்​கறதுக்​காக நிறையவே மெனக்​கெடு​வேன். கிட்​டத்​தட்ட இது​வும் ஓர் இயக்​குநருக்​கான வேலை தான். அதனால​தான் ‘டப்​பிங் டைரக்​டர்​’னு டைட்​டில் கார்​டுல போடறாங்க. இது​வரை நான் பண்​ணின படங்​களை, மலை​யாளத்தை விட தமிழ்ல நல்லா இருக்​குன்னு சொல்​லி​யிருக்​காங்க. அந்த பெயர் திருப்​தியா இருக்​கு.

என்ன மாதிரி​யான சவால்​களை எதிர்​கொள்​றீங்க?

‘லிப் சிங்​’குக்கு வசனம் எழுதறதும் அதுக்கு சரி​யான வாய்ஸை கொடுக்​கிறதும், அதைச் சரியா பேசறதும்​தான் இதுல சவாலான விஷ​யம். ஒரிஜினல் தன்மை குறைஞ்​சி​டாம, நம்ம ஆடியன்ஸுக்​கும் தெளிவா புரியற மாதிரி அதை பண்​றது​தான் பெரிய வேலை.

சமீபத்​துல வெளி​யான ‘லோ​கா- சாப்​டர் 1: சந்​தி​ரா’ படத்தை எடுத்​துக்​கிட்​டீங்​க​னா, தமிழ், தெலுங்​கு, கன்​னடம், இந்​தின்னு நான்கு மொழிக்கு நான்​தான் டப்​பிங் பண்​ணினேன். இப்ப இருக்​கிற ஹீரோக்​கள், அவங்​களே மற்ற மொழிகள்ல பேசிடறாங்க. துணை கதா​பாத்​திரங்​களுக்​கான சரி​யான குரலைக் கண்​டு​பிடிச்சு பேச வைக்​கிறது ரொம்ப முக்​கி​யம்.

பரத்​தின் 50-வது படத்தை இயக்​குனீங்​களே... அடுத்​து?

பரத், வாணி போஜன் நடிச்ச ‘லவ்’ படத்தை தயாரிச்​சு, இயக்​கினேன். அந்​தப் படம் விமர்சன ரீதி​யாக வரவேற்​பைக் கொடுத்தது. அடுத்து 2 படங்​களை இயக்​குறேன். வித்​தி​யாச​மான கதைகளங்​கள். அதுபற்றி தகவல்​கள் அடுத்​தடுத்து வரும். இதுக்கிடையில என்​னோட ஆர்​.பி.பிலிம்ஸ் சார்பா ‘கொலைச்​சேவல்​’ங்கற படத்தை தயாரிச்​சிருக்​கேன். வி.ஆர்​.துதிவாணன் இயக்கி இருக்​கிறார். கலை​யரசன், தீபா பாலு, பால சரவணன், வெங்​கட், கஜராஜ் என நிறைய பேர் நடிச்​சிருக்​காங்க. ஷுட்​டிங் முடிஞ்​சிருச்​சி. அடுத்த வருஷம் வெளி​யிடறதுக்​கான வேலைகள் போயிட்​டிருக்​கு.

SCROLL FOR NEXT