தமிழ் சினிமா

கிராம மக்​கள் வெளி​யிட்ட ‘என்ன விலை’ பர்​ஸ்ட் லுக்

நிலா

சஜீவ் பழூர் இயக்​கத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’.

இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார்.

இப்​படத்​தின் முதல் தோற்​றத்​தை, படப்பிடிப்பு நடந்த தனுஷ்கோடி அரு​கிலுள்ள பாலம் கிராம மக்​களை வைத்து வெளியிட்​டுள்​ளனர். இது அந்​தக் கிராம மக்​களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்​வாக மாறியது.

இயக்​குநர் சஜீவ் பழூர் கூறும்​போது, “ஒரு படத்தை உரு​வாக்​கும் போது கதைக்​கான இடத்தை தேர்வு செய்​வோம். ஆனால், சில நேரங்​களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்​களும் கதை​யின் ஓர் அங்​க​மாகவே மாறி​விடு​கின்​றனர்.

இப்​படத்​தின் படப்​பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்​கள், எங்​களை குடும்​ப​மாக அரவணைத்​தனர். இந்த திரைப்​படம் முதலில் அவர்களுக்கே சொந்​த​மான​தாக இருக்க வேண்​டும் என்று நினைத்​தோம். அதனால் அவர்​களை வைத்து முதல் தோற்​றத்தை வெளி​யிட்​டோம்” என்​றார்.

SCROLL FOR NEXT