நடிகர் ரஜினி​காந்த்

 
தமிழ் சினிமா

ரஜினி​காந்த் பெயர், புகைப்படத்தை பயன்​படுத்​தக் கூடாது: ரசிகர் மன்றம் அறிக்கை

நிலா

நடிகர் ரஜினி​காந்த் பெயரை​யும் புகைப்​ படங்​களை​யும் பல்​வேறு அரசி​யல் கட்​சிகளும் இயக்​கங்​களும் பயன்​படுத்தி வரு​கின்​றன. பொது ​நிகழ்ச்​சிகளி​லும் அவர் புகைப்​படங்​கள் பயன்​படுத்​தப் படுகின்​றன. இந்​நிலை​யில் அவர் பெயர், புகைப்​படத்தை எந்த அரசியல் கட்​சி​யும் பயன்​படுத்​தக் கூடாது என்று ரஜினி​காந்த் நற்பணி மன்​றம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அம்​மன்​றத்​தின் தலை​வர் சம்​பத்​கு​மார் வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில், “ரஜினி​காந்​தின் பெயரையோ, புகைப் ​படத்​தையோ எந்த ஒரு கட்​சி​யோ, அமைப்போ பயன்படுத்தக் கூடாது. ரஜினி ​காந்​தின் உத்​தர​வுபடி ரசிகர்மன்ற நிர்​வாகி​கள் மற்​றும் ரசிகர்​களுக்கு இதைத் தெரி​வித்​துக்​கொள்கிறோம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT