தமிழ் சினிமா

விஜய் மில்டன் இயக்கும் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’

நிலா

விஜய் மில்​டன் இயக்​கத்​தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்​ஜுனன், சுனில் ஷெட்​டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்​பா, அம்மு அபி​ராமி, பரத் சீனி உள்பட பலர் நடித்​துள்ள படத்​துக்கு ‘காட்ஸ் அண்ட் சோல்​ஜர்​ஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

ரஃப்​நோட் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு சாம் சி.எஸ். இசை அமைத்​துள்​ளார். அதிரடி ஆக் ஷன், சென்​டிமென்ட்டுடன் எளிய மனிதர்​களின் கதையைச் சொல்​லும் இப்படத்​தின் டிரெய்​லரை இயக்​குநர் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் வெளியிட்டார். இது ரசிகர்​களிடையே வரவேற்​பைப் பெற்று வருகிறது. இப்​படத்​தின் ஆடியோ மற்​றும் டிரெய்​லர் வெளி​யீடு விரை​வில் இருக்​கும் என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT