தமிழ் சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

நிலா

நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது என பலர் நடித்துள்ள படம், 'நீளிரா'. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன், தன் வலியை, தன் நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படம் வெறுப்பை பேசவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படமல்ல.

ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. இந்தப் படம் யாரையும் நேரடியாக விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்புக்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களைத் தான் பதிலாக சொல்ல முடியும்" என்றார்.

          
SCROLL FOR NEXT