தமிழ் சினிமா

‘சூரி​யின் வெற்​றியை மக்கள் தங்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள்!’ - வெற்றிமாறன்

நிலா

சூரி கதா​நாயக​னாக நடித்​துள்ள ‘மண்​டாடி’ திரைப்​படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்​கி​யுள்​ளார். தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர்.

ஜி.​வி.பிர​காஷ் இசை அமைத்த இப்​படத்தை ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெ​யின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரித்​துள்​ளார். இப்படம் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றுள்ள நிலை​யில் இதன் வெற்​றி​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து​கொண்​டனர்.

இயக்​குநர் வெற்​றி​மாறன் பேசும்​போது, “ஒரு படத்​தைப் பற்றி பேசும்​போது முக்​கிய​மாக கவனிக்க வேண்​டியது மக்​களு​டைய ஏற்​பு​தான். அவர்​கள் கொண்​டாடு​கிறார்​கள் என்​கிற​போது நாமும் அதை ஏற்​றுக்கொள்ள வேண்​டும்.

இப்​போது இயக்​குநர் மதிமாறனுக்​குச் சொல்ல வேண்​டிய விஷ​யம் ஒன்று உண்​டு. இவ்வளவு காலம் எதற்​குப் போராடினோமோ அந்த இடத்​துக்கு வந்​திருக்​கிறோம்​. இனி நிதானம் தேவை. எல்​லா​வற்​றி​லும் நிதானமாகச் சென்​றால் எல்​லாமே சரி​யாக இருக்​கும் என்று நம்புகிறேன்.

தயாரிப்​பாளர் எல்​ரெட்​கு​மார் சிறப்​பானவர். நீண்ட நாளுக்கு முன்பு ‘விடு​தலை 1’ கதையைச் சொன்​னேன். எடுக்​கும் போது செலவு அதி​க​மாகும் என்று தயங்​கினேன். ஆனால் அவர் விடா​மல் பரவா​யில்லை, எடுக்​கலாம் என்று கூறி​னார். அந்த ஒரு தருணம் மறக்க முடி​யாதது. சினி​மா​வின் மீது காதல் உள்ள தயாரிப்​பாளர் அவர். எப்​போதும் தன்னை ஓர் உதவி இயக்​குந​ராகவே நினைத்துக் கொண்டு ஈடு​பாடு காட்​டு​பவர்.

சூரியைப் பார்க்கும்போது அவரது பயணம் கண்​கூ​டாகத் தெரி​கிறது. சூரியை, மக்​கள் தங்​களில் ஒரு​வ​ராக​வும் அவர் வெற்​றியை தங்கள் வெற்​றி​யாக​வும் கொண்​டாடு​கிறார்​கள். அதை அவர் தக்கவைத்​துக்​கொள்​ள வேண்​டும்” என்​றார்​.

SCROLL FOR NEXT