தமிழ் சினிமா

‘டிரெ​யின்’ கதை​யில் விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்​திருக்க முடியாது: மிஷ்கின்

நிலா

மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். ரூ.4 கோடி என்​றேன். அவர் ஒரு ரூ.60 கோடி​யில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது; இது சாதாரண கதை’ என்​றேன். அந்தக் கதை விக்​ர​முக்கு பிடித்​திருந்​தது. ஆனால் பண்ண முடியவில்லை.

ஆனாலும் தாணு சார் அப்​போது எனக்கு ஒரு அட்​வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.

இந்​தக் கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.

SCROLL FOR NEXT