கஸ்தூரி ராஜா, இயக்​குநர் மீரா கதிர​வன்

 
தமிழ் சினிமா

இஸ்​லாமியர்​கள் குறித்த பார்வையை ‘ஹபீபி’ மாற்றி இருக்கிறது: இயக்​குநர் மீரா கதிரவன் மகிழ்ச்சி

நிலா

மீரா கதிர​வன் இயக்​கத்​தில் இயக்​குநர் கஸ்​தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்ள படம் ‘ஹபீபி’. நேசம் என்​டர்​டெ​யின்​மென்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக் ஷன்​ஸ், ரோமியோ பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படத்​துக்கு மகேஷ் முத்து சு​வாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

சாம் சி.எஸ் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் ஜூன் 12ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​ குழு​வினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்​சி, இயக்​குநர் தமிழ், சித்த மருத்துவர் சிவ​ராமன் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

நடிகர் கஸ்​தூரி ராஜா பேசும்​போது, "இந்​தப் படத்தை தனுஷ் பார்த்​து​விட்டு கவுர​வ​மான ஒரு படத்​தில் நடித்​துள்​ளீர்​கள் என்​றார். இந்​தப் பெயரை வாங்​கித் தந்த மீரா கதிர​வனுக்கு நன்​றி. இந்த படமும் யூசுப் கதா​பாத்​திர​மும் எனக்கு இன்​னொரு பிற​வி. இஸ்லாமிய​ராக நான் நிஜத்​தி​லும் மாறி​விட்​டேனோ என எனக்​குத் தோன்​றும். இயக்​குந​ராக கஸ்​தூரி ராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்​கலாமோ எனவும் தோன்றும்” என்​றார்.

இயக்​குநர் மீரா கதிர​வன் பேசும்​போது, "110 வருட தமிழ் சினிமாவில் இது என்​னுடைய முதல் படமாக இருக்க வேண்​டும் என விரும்​பு​கிறேன். நெருக்​கடி​யான தருணத்​தில் தயாரிப்​பாளர் சுரேஷ் காமாட்சி இந்​தப் படத்​துக்​குப் பணம் தந்து உதவி​னார். இயக்​குநர் ராம் இந்​தப் படத்​தைத் தோளில் தூக்​கிச் சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்​சம் கிடைத்​தது. எல்லா நல்ல படங்​களுக்​கும் அவர் இப்​படிச் செய்​வார். இஸ்​லாமியர்​களைத் தீவிர​ வாதிகளாகச் சித்​தரித்​த​தில் திரைத்​துறைக்கு பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்​டும் என்​றால் நாம் தான் முன்வர வேண்​டும். இஸ்​லாமியர்​கள் குறித்​த பார்​வையை இந்​தப்​ படம்​ மாற்​றி இருக்​கிறது என்​ப​தை பெரும்​ வெற்​றி​யாக நினைக்​கிறேன்​" என்றார்.

SCROLL FOR NEXT