தமிழ் சினிமா

கோபி நயினார் இயக்கும் ‘காலனி’

நிலா

‘அறம்’ படத்தை இயக்​கிய கோபி நயினார், அடுத்து ‘மனுஷி’ படத்தை இயக்​கி​யுள்​ளார். இதற்​கிடையே அவர் இயக்​கி​யுள்ள திரைப் ​படம் ‘காலனி’.

ராதிகா இதில் வலு​வான மையக் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். அவரது மகனாக அறி​முக நடிகர் லியோ நடிக்​கிறார். அஞ்​சலி நாயர், எம்​.எஸ்​.​பாஸ்​கர், சேத்​தன், ஆர்​.கே.​விஜய​முரு​கன், வினோத் சாகர், மூணாறு ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்​கட்​ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். தேவா இசையமைத்​துள்​ளார். ஆர்​.வேல்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்துள்ளார்.

          

அதிதி மூவிஸ் தயாரிப்​பில் டாக்​டர் ஆர்​.​நாக​ராஜன் வழங்​கும் இப்​படம் தனது மகனின் இறப்​புக்கு நீதி தேடிப் போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணத்தை மைய​மாகக் கொண்​டது. தற்​போது இறு​திக்​ கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதன் முதல் தோற்ற போஸ்​டரை இயக்​குநர் வெற்​றி​மாறன், விஜய் சேதுப​தி வெளி​யிட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT