‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கும் படத்துக்கு ‘ஆகாயம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரகு நந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது வரவேற்பைப் பெற்று வருகிறது.