சாந்தினி தமிழரசன்
அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்கும் படம், ‘திக். திக்.. திக்...’. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி, பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தைத் தயாரிக்கிறது. ரகு ராஜகோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டிகே இசையமைக்கிறார்.
“சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் இது. ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சஸ்பென்ஸுடன் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையையும் இணைக்கும் இப்படம், சமகால சூழலுக்குப் பொருந்தக்கூடிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தையும் பேசுகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.