ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓம்: சாப்டர் 1’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தனுஷின் 55-வது படமான இதை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
ஆர் டேக் ஸ்டூடியோஸ் சார்பில் ஷ்ரத்தா, வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஷ்ரேயாஸ், டிவோ மியூசிக் சார்பில் விஷு, வார்னர் மியூசிக் குழுமம் சார்பில் ஜே மேத்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது, “இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. படத்தின் போஸ்டரை வெளியிடுவதற்குப் பதிலாக, தனுஷ் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளோம்.
டீஸர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்துக்கான அறிமுக டீஸர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும் வரும் மாதங்களிலும் வெளியாகும். அக். 16-ம் தேதி படம் வெளியாகும். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்புக்குள் சுவாரஸ்யமான அம்சங்கள்