படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனுஷின் அடுத்த படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகி இருக்கிறது.
‘கர’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தமிழரசன் பச்சமுத்து ஆகியோரது படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதில் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்த கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விலகிவிட்டதால், தற்போது இப்படத்தினை தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இருவருமே இணைந்து தயாரிக்கிறார்கள்.
இன்னும் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்தவொரு அறிவிப்புமே வெளியிடப்படவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது. தற்போது இப்படத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தனுஷுடன் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து மம்முட்டி நடிக்கவுள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார்.